Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இளைஞர்களுக்கு இனி வேலை வாய்ப்புக்கு பஞ்சமே இல்ல!! முதல்வர் ஸ்டாலின் அதிரடி!!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். அதற்குப் பின் கொரோனா நெருக்கடியாக இருந்த போதிலும் தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தார். பல வளர்ச்சி திட்டங்களை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து செயல்படுத்தி வருகிறார்.

மேலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறார். முதல்வர் ஸ்டாலின் தலைமையை தமிழ் முதல் முகவரி தமிழ்நாடு என்று பெயரில் விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து கிண்டியில் ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் 28,508 கோடி முதலீட்டில் 49 திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார். 28,508 கோடி ரூபாய் முதலீட்டில் 83,432 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக வழி செய்யப்பட்டுள்ளது.

மேலும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற மாபெரும் விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். தமிழ்நாடு பண்பாட்டின் முகவரியாக இருந்தது என்றும், அப்படிப்பட்ட தமிழ்நாட்டின் முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக மாற்ற வேண்டும் என செயல்பட்டு வருகிறோம்.

கொரோனா கணிசமாக முதலீடுகளை ஈர்த்துத உள்ளது. சவால்களை எதிர்கொள்ள எங்கள் அரசு நிலைத்து நிற்கும் என நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார். மேலும், தெற்கு ஆசியாவில் தொழில் புரிவதற்கு உகந்த சூழலை உருவாக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது என்றும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தை மேம்படுத்த ஒற்றை சாளர இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

தொழில் நிறுவனங்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் அதனை தொடர்ந்து பெயரளவு காகித அளவு என இல்லாமல் திறம்பட செயல்படும் முறை செயல்படுத்தப்படும். அதனை நான் கண்காணிப்பேன் என்று கூறினார். அனைவருக்கும் கல்வி மற்றும் சமூக மேம்பாடு, தொழில் வளர்ச்சி ஆகிய மூன்றும் ஒரே சீராக வளர வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு அரசின் இலக்கு என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் தொழில் முதலீடுகள் தமிழகம் முழுவதும் பரவலாக உள்ளது”என அவர் தெரிவித்தார்.

Exit mobile version