பிணவாடைக்கு ஏங்கும் பிதாமகன்கள்! ஸ்டாலின் திருமா பா ரஞ்சித்தை தாக்கிய பாஜக
கோவை மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட நடுர் கிராமத்தில் இரண்டு நாட்கள் முன்பு இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக கருங்கல்லால் ஆன மதில்சுவர் இடிந்து சுவரோரம் இருந்த வீடுகளில் மீது விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர், நாட்டையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்திற்கு நாட்டு மக்கள் முழுவதும் இரங்கல் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் மக்கள் தங்கள் வீட்டு சோக நிகழ்வாக கடைப்பிடித்து வருகின்றனர். 17 பேரில் 4 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உடல் நசுங்கி உயிரிழந்த 17 பேருக்கும் தமிழக அரசின் சார்பில் முதலில் நான்கு லட்சம் ரூபாயும் பின்பு நேற்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்த பின், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூடுதலாக 6 லட்சம் சேர்த்து 10 லட்சமாக உயர்த்தி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார். அத்துடன் குடும்பத்தில் தகுதியான நபர் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என்று தெரிவித்தார். என்னதான் இழப்பை சரிகட்ட முடியாவிட்டாலும் முதல்வரின் இந்த அறிவிப்பு, குடும்பத்திற்கு சற்று ஆறுதலாக இருக்கும் என்று தமிழக மக்கள் எண்ணி வருகின்றனர்,.
நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் நேரில் சென்று 17 பேரின் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தார். பின்பு ட்விட்டரில் தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்ததால் தான் 17 பேரும் உயிரிழந்துள்ளனர் என்று பதிவிட்டார். இது தமிழக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தொழில் அதிபர் சிவசுப்பிரமணியனுக்கு சொந்தமான இடத்தில் சொகுசு பங்களா இருந்துள்ளது,. அதனைச்சுற்றி கருங்கற்களாலான சுவர் எழுப்பப்பட்டுள்ளது,. இதற்கு அங்குள்ள மக்கள் ஆட்சேபனை தெரிவித்த உடனே அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், இதற்கு காரணமே அதிகாரிகள் தான் என்று தெரியவந்துள்ளது.
ஆனால், உயிரிழந்தவர்கள் 17 பேரும் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் இதனை வைத்து அரசியல் செய்ய சில கட்சிகளும் சில தலித் பிரமுகர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இது தீண்டாமைச்சுவர் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்து சாதி சாயத்தை உயிரிழந்தவர்களின் மீது பூசினார், மேலும் தலித் மக்களின் தலைவனாக தன்னை முன்னிறுத்திக் கொண்டு இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சிவசுப்ரமணியனை கைது என்றும் தெரிவித்தார்,. அத்துடன் தலித்துகள் பற்றி பேசி, தான் ஒரு புரட்சியாளர் என்று திரைப்படம் மூலம் சொல்லாமல் சொல்லும் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களும் உயிரிழப்பிற்கு காரணம், அரசியல்வாதிகளும் ஜாதியாளர்களுமே தான் காரணம் என்று தெரிவித்தார்.
ஆனால் சில பிணவாடைக்கு ஏங்கும் பிதாமகன்கள், விசாரணை துவங்கும் முன்பே தீர்ப்பு எழுதி குளிர்காய நினைப்பது அருவருக்கத்தக்கது.
தமிழக அரசு விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கையில், யூகங்களின் அடிப்படையில் சாதிமத கருத்துக்களை பரப்பி விசாரணையின் போக்கை மாற்றுவது கண்டிக்கத்தக்கது.
என்று தமிழக பாஜக, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “பிணவாடைக்கு எங்கும் பிதாமகன்கள்” என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.