செமஸ்டர் தேர்வுகள் குறித்து ஸ்டாலினின் கோரிக்கை!

0
120

அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை பொறியியல் சம்பந்தப்பட்ட மாதிரி தேர்வுகள் கடந்த 19ஆம் தேதி  ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. அதில் பல மாணவர்கள் பங்கேற்று தங்களின் தேர்வுகளை எழுதி உள்ளனர். சிலரின் பெயர் ஆன்லைன் பட்டியலில் இடம் பெறவில்லை என்றும் சொல்லப்பட்டு வருகிறது.

இந்த தேர்வில், இயற்பியல் பாட பரீட்சையின் போது 38 மதிப்பெண்களுக்கு வேதியியல் பாடத்திலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும்  பரீட்சையின் போது குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வாளர்கள் இந்த  குறிப்பிட்ட பாடப்பிரிவை எழுத முடியாத மாணவர்களும் பயன்பெறும் வகையில் மீண்டும் இத்தேர்வினை நடத்தக்கோரி பல தரப்புகளில் கோரிக்கை எழுந்து வருகிறது. ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார்.

“அண்ணா பல்கலைகழகம் மாணவர்களுக்கு செமஸ்டர்    தேர்வுகளை மீண்டும் எழுத வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் பல குளறுபடிகளை கொண்ட இத்தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அனைத்து மாணவர்களும் மாதிரி செமஸ்டர் தேர்வுகளையும் தங்களின் செமஸ்டர் தேர்வுகளையும் நல்ல முறையில் எழுதுவதற்கு பல்கலைக்கழகம் முழு ஒத்துழைப்பையும் ஈடுபாட்டையும் தரவேண்டும்” என்றும் அக்கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.