Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மதுரையில் அவமானப்பட்ட ஸ்டாலின்! திமுகவினர் கடும் கொந்தளிப்பு!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் அன்று அவருடைய நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்ற, திமுக தலைவர் ஸ்டாலின் விபூதியை வாங்கி நெற்றியில் பூசிக் கொள்ளாமல், கழுத்தில் தடவிக் கொண்டு கீழே கொட்டியது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது. நெற்றியில் திருநீறு பூசாமல் கழுத்தில் தடவியதால் அது என்ன டால்கம் பவுடரா என்று கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்கள்.

இந்த விவகாரத்தில் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், ஸ்டாலின் அது சம்பந்தமாக எந்த ஒரு கருத்தும் கூறாமல் இருந்து வருகின்றார்.

இதன் காரணமாக பாரதிய பார்வர்டு பிளாக் என்ற கட்சி நிறுவனத்தலைவர் முருகன் ஜி 113 இடங்களில் ஸ்டாலினின் உருவபொம்மை எரிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மதுரை கோரிப்பாளையம் ,தேவர் சிலை முன்பாக பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளர் கதிரவன், இளைஞரணி தலைவர் ரவி, ஆகியோரின் தலைமையில் ஸ்டாலின் உருவபொம்மையை எரித்து இருக்கிறார்கள்.

காவல்துறையினர் உடனே அங்கே வந்து, எரிந்துகொண்டிருந்த உருவ பொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்து இருக்கிறார்கள். அதன் பின்பு உருவபொம்மை எரித்த அனைவரையும் கைது செய்தார்கள் இதன் காரணமாக மதுரையில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

Exit mobile version