இனியாவது மத்திய அரசு தன் பிடிவாதத்தை கைவிடுமா…! ஸ்டாலின் கேள்வி…!

0
150

மருத்துவ படிப்பிற்கான நீட்நுழைவு   தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இந்தியாவில் கடந்த நான்கு வருடங்களாக நீட் நுழைவுத்தேர்வு நடந்துகொண்டு இருக்கின்றன இந்த தேர்வினை சிபிஎஸ்சி வழிமுறையை பின் பற்றி எழுதவேண்டும் என்பதால் தமிழகத்தை சார்ந்த அரசுப் பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகளால் அந்த தேர்வினை சரிவர எழுத முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்று தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் மாணவ மாணவியர்கள் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்ந்து வருகின்றது.

இதனால் மாணவர்களின் உயிரை பறிக்கும் இந்த நீட் நுழைவுத் தேர்விற்கு ஒரு முடிவு வர வேண்டும் என்று திமுக போன்ற எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள் இந்த ஆண்டு நீட் தேர்வில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் இந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள் ஆனாலும் அது பொய்யான தேர்ச்சி விபரம் எனவும் நீட்டில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகின்றது என்று அரசு ஒரு பொய்யான விஷயத்தை பரப்பி வருகின்றது எனவும் திமுக தெரிவித்து இருக்கின்றது இந்நிலையில் இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.

அந்த அறிக்கையில் தமிழகத்தில் நீட் தேர்ச்சி விகிதம் அதிகமாகிறது என்ற ஒரு பொய்யான தகவலை பரப்புவோர் போட்ட கபட நாடகம் இன்று வெளியாகியுள்ளது.

720 மதிப்பெண்ணுக்கு 113 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி என்று நிர்ணயித்து இருக்கின்றது என் டி ஏ எனும் தேசிய தேர்வு முகமை ஒருவர் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றாலே மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம் என்று கருத்து மாணவ மாணவியர் இடையே பரப்பப்பட்டு வருகின்றது ஆனால் இது உண்மையற்ற ஒரு தகவல் இதன் மூலம் எம்பிபிஎஸ் சேர்வதற்காக விண்ணப்பம் மட்டுமே போட முடியும் விவரமாக சொல்ல வேண்டுமென்றால் கணிதத்தில் ஒரு மாணவர் 35 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவதைப் போல தான் இந்த நீட் நுழைவுத்தேர்வு வேறு எதுவும் கிடையாது.

இந்த ஆண்டு இந்த தேர்விற்கான கட்-ஆப் மதிப்பெண்கள் இருந்து இருக்கின்ற நிலையில் பெரும்பாலான கிராமப்பகுதிகளில் இருக்கின்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சார்ந்த எட்டே எட்டு மாணவர்களுக்கு மட்டும்தான் எம்பிபிஎஸ் படிப்பதற்கான அனுமதி கிடைக்கும் என்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா என்ற நாளேடு.

அரசு பள்ளி மாணவர்களின் நீட் தேர்வில் 300 மதிப்பெண்ணிற்கு மேல் வாங்கியவர்கள் வெறும் 89 பெர் மட்டும்தான் அரசினர் பயிற்சி மையத்தில் படித்து ஐநூறுக்கும் மேல்பட்ட மதிப்பெண்களை ஆங்கில அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்கள் நான்கு பேர் 495 மற்றும் 497 ஆகிய மதிப்பெண்கள் பெற்ற இரண்டு பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள் இதுதவிர இரண்டு மாற்றுத்திறனாளி மாணவர்கள் என்று மொத்தமாக எட்டு பேருக்கு மட்டும்தான் மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு அளிக்கப்படுவதாக தெரிவிக்கிறது இந்த நாளேடு.

அதிலும் அந்த மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்பதை உறுதியாக சொல்ல இயலாது 300 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கிய 89 மாணவர்களில் 82 அரசு பள்ளி மாணவர்களுக்கு அதிலும் குறிப்பாக அவர்களில் 423 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு கூட மருத்துவராகும் வாய்ப்பு கிடைக்காது என்கிறார்கள்.

இந்த தேர்வு முறையை நியாயப்படுத்தும் நோக்கத்தில் தமிழகம் அதிக தேர்ச்சி இடங்களை பெற்று சாதித்துக் கொண்டிருக்கிறது என்று பூரிப்பு அடைவோர் பரப்புரை செய்யலாம் என்ற கனவில் மிதந்து கொண்டு இருந்தவர்கள் இந்த உண்மையை அறிந்து தெளிவாக இருப்பார்களா.

இனிவரும் காலங்களிலாவது இந்த நுழைவுத் தேர்விற்கு பரிந்து பேசாமல் நியாயத்தை எடுத்துரைப்பார்களா? தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ கனவு நனவாக வேண்டும் என்றால் மத்திய அரசு தனது பிடிவாதத்தை விட்டொழிக்க வேண்டும் என்று புரிந்து கொண்டு நடப்பார்களா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.