Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கழக அரசின் உறுதியான நிலைப்பாடு இதுதான்! சட்டமன்றப் பேரவையில் ஸ்டாலின் பேச்சு!

உழவர் நலனுக்கு எதிரான வேளாண் சட்டங்கள் மற்றும் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் குடியுரிமை சட்டம் ஆகியவற்றை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதே கழக அரசின் உறுதியான நிலைப்பாடு என்று சட்டமன்றப் பேரவையில் ஸ்டாலின் பேசி உள்ளார்.

எனவே உழவர் நலனுக்காக எதிரான வேளாண் சட்டத்தையும், சிஏஏ ஆகியவற்றையும் தடுக்கக் கோரி எதிர்வரும் நிதிநிலை கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் பேசியுள்ளார்.

சட்டமன்றப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேசியது, “மூன்று வேளாண் சட்டங்களைப் பற்றி எடுத்து சொல்லி அதைத் திரும்பப் பெற வகையில் நிறைவேற்றிட வேண்டும். வேளாண் திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நாள் முதல் உழவர் நலனுக்கு எதிரான இந்த சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று திராவிட முன்னேற்ற கழகம் பல்வேறு தருணங்களில் வலியுறுத்தி வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய உழவர்களை புரிந்து கொண்டு அவர்களது உணர்வுக்கு மதிப்பளித்து, மாநில முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் இந்த மூன்று சட்டங்களையும் திரும்பிப் பெற வேண்டுமென ஒன்றிய அரசை வலியுறுத்தி இந்த அவையிலே ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற இந்த அரசு தெளிவாக முடிவு செய்துள்ளது.
அதில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால் இந்த அவையின் முதல் கூட்டத்தொடர் என்ற முறையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்த தீர்மானங்களை முன்மொழிந்து வரக்கூடிய பட்ஜெட் கூட்டத் தொடரின் போது உரிய தீர்மானத்தை கொண்டு வந்த நிச்சயமாக ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான, தமிழ்நாடு அரசின் எதிர்ப்பு முழுமூச்சோடு வலியுறுத்துவோம், என்பதை உறுதியோடு தெரிவிக்கிறேன் என்று கூறினார்.

அதேபோல ஒன்றிய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டம் நாடு முழுவதும் உள்ள சிறுபான்மை மக்களின் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள இந்த சூழ்நிலையில் அதனையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார்.

Exit mobile version