பதவியேற்பு விழாவில் கண்ணீர் வடித்த ஸ்டாலின் மனைவி! மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததாலா!
சட்டமன்ற தேர்தலானது கடந்த மாதம் 6-ம் தேதி நடைபெற்று முடிந்தது.இந்த சட்டமன்ற தேர்தல் இரு மூத்த தலைவர்கள் இன்றி நடைபெற்றுது.அதனால் யார் ஆட்சியை கைப்பற்ற போகிறர்கள் என பெறும் போட்டி நிலவியது.இதில் பல கருத்துகணிப்பில் திமுக தான் ஆட்சியை கைப்பற்றும் என கூறிவந்தனர்.அதே போல திமுக 159 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைய அமைத்துள்ளது.அதே அதிமுக 75 இடங்களில் வெற்றி பெற்று தோல்வியை சந்தித்தது.
தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவி பிரமாணம் செய்ய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் உரிமை கூறினார்.அதனையடுத்து இன்று திமுக தலைவர் பதவி ஏற்றார்.இன்று காலை சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்றார்.பதவியேற்பு விழாவில் முக்கிய இதர கட்சித்தலைவர்கள் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினர் கலந்துக்கொண்டனர்.
திமுக தலைவருடன் சேர்ந்து திமுக அமைச்சர்கள் 33 பேரும் பதவி பிரமாணம் செய்த்தனர்.நிகழ்ச்சி தொடக்கத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பதவி பிரமாணம் செய்தார்.அதன்பின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பதவி பிரமாணமும்,ரகசிய காப்பும் செய்து வைத்தார்.அதனையடுத்து அமைச்சர்களுக்கும் பதவி பிரமாணமும் ரகசிய காப்பும் செய்து வைத்தார்.அதனையடுத்து திமுக தலைவர்,முத்துவேல் கருணாநிதி என்னும் நான் எனக் கூறுகையில்,கீழ் அமர்ந்திருந்த திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஆனந்த்,கண்ணீர் வடித்தார்.இது அங்குள்ள அனைவருக்கும் நெகிழ்ச்சி சம்பவமாக இருந்தது.10 ஆண்டுகள் போராடியதற்கு தற்போது தான் பயன் கிடைத்துள்ளது என்பதை ஆனந்த கண்ணீராக தனது உணர்ச்சியை துர்கா ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஆனால் வெளி வட்டாரங்களோ மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால் தான் இவர் கண்ணீர் வடித்தார் என பேசி வருகின்றனர்.