இன்று முதல் இது தொடக்கம்! மக்களே விரைந்திடுங்கள்!
கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்கள் முதல் அலையில் பெருமளவு பாதிப்புகளை சந்திக்கவில்லை.ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலையில் ஆயிரக்கணக்கில் உயிர் சேதத்தை சந்திக்க நேரிட்டது.அதனையடுத்து அரசாங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.கொரோனா தொற்று அதிகளவு பரவியதால் மக்களும் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஊரடங்கு காலத்தில் மக்கள் வேலை வாய்ப்புகள் இன்றி பெருமளவு பாதிக்கப்பட்டனர்.அப்போது தான் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ.2000 வழங்கினார்.
அதனையடுத்து மக்களுக்கு 12 பொருட்களை இலவசாமாக கொடுத்து மக்கள் வாழ்வாதாரம் நடத்துவதற்கு உதவினார்.அதனையடுத்து மீதமுள்ள ரூ.2000 மக்களுக்கு வழங்கினார்.மக்களுக்கு இவ்வாறு நலத்திட்ட உதவிகளை செய்தும் அவர்களுக்கு அது போதுமானதாக இல்லை.அதனால் மக்கள் வாழ்வாதாரத்தை நடத்த தொற்று குறைந்த மாவட்டங்களில் சில தளர்வுகளை ஏற்படுத்தினார்.அவ்வாறு ஏற்படுத்திய போது பணிக்கு செல்லும் ஆண் பெண் இருவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தியது.
முதலில் மக்கள் யாரும் கொரோனா தடுப்பூசி போட முன் வரவில்லை என்றாலும் அதிகளவு உயிர் சேதம் நடைபெறுவதை பார்த்து தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசி போட முன் வந்து விட்டனர்.மக்கள் விழிப்புணர்வுடன் தடுப்பூசி போட முன் வரும் வேளையில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது.
இதுகுறித்து வழக்கறிஞர்களுக்கு தடுப்பூசி போடப்படும் முகாமில் கலந்துக்கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்.மா.சுப்பிரமணியன் கூறியதாவது,தற்போது மக்கள் விழிப்புணர்வுடன் தடுப்பூசி போட முன் வரும் நேரத்தில் இவ்வாறான பற்றாக்குறை மக்களுக்கு ஏமாற்றத்தையே தரும்.அதுமட்டுமின்றி தற்போது 2 லட்சம் டோஸ் மட்டுமே கையிருப்பில் உள்ளதால் இன்று மதியத்திற்குள்ளேயே பெருமளவு தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும் என கூறினர்.
அவர் கூறிய அடுத்த நாட்களிலேயே சென்னையில் செயல்பட்டு வந்த தடுப்பூசி முகாம்கள் தற்காலிகமாக மூடப்பட்டது.மத்திய ஒன்றிய அரசும் தடுப்பூசி வழங்குவதில் தாமதம் படுத்துவதால் மக்கள் தினந்தோறும் தடுப்பூசி எப்பொழுது வரும் எனக் கேட்டு சென்று ஏமாற்றத்தை அடைகின்றனர்.
தற்போது சென்னை மாநகராட்சி நேற்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது.அதில் கூறியதாவது,நாளை அனைத்து முகாம்களிலும் தடுப்பூசி போடப்படம் என்று அதிகாரப்பூர்வமான தெரிவித்தது.அந்த அறிவிப்பை அறிந்த மக்கள் காலை முதலே டோக்கன் பெற்றுக்கொண்டு நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருந்தனர்.தற்போது வந்துள்ள தடுப்பூசிகளும் போதுமானதாக இல்லை.மேலும் மக்கள் அனைவரும் முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசியை செலுத்தி செல்கின்றனர்.