திடுக்கிடும் தகவல்! சின்னக்கலைவானராகிய விவேக்கின் மரணத்திற்கு இது தான் காரணமா?

0
149

விவேக் (Vivek, 19 நவம்பர் 1961 – 17 ஏப்ரல் 2021) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் நகைச்சுவை,மக்கள்தொகைப்பெருக்கம் மற்றும் லஞ்சம்,மூட நம்பிக்கை, அரசியல் ஊழல்கள், போன்றவற்றை வசனங்கள் பேசுவதால் இவரை பலரும் சின்னக் கலைவாணர் என்றும் மக்களின் கலைஞன் என்றும் அடைமொழிகளை கூறி அழைக்கின்றனர்.

இந்நிலையில்,தமிழ்த் திரைப்பட ‘நகைச்சுவை நடிகராகிய விவேக் அவர்கள் கொரோனா தடுப்பூசியால் உயிரிழக்கவில்லை.இவர் உடலில் மிகவும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக, மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்’ என, மத்திய நோய் தடுப்பு பிரிவு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நகைச்சுவை நடிகராகிய விவேக் அவர்கள் சென்ற, ஏப்ரல் 15ம் தேதி, சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தி கொண்டார். அப்போது, ‘அச்சப்படாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்’ எனவும் மக்களுக்கு வேண்டுகோளும் கூறியுள்ளார்.

மேலும், விவேக் தடுப்பூசி செலுத்திக் கொண்ட அடுத்த நாள், திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிந்த நிலையில் திடீரென உயிரிழந்தார். இதற்கிடையே,விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர், நடிகர் விவேக் தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் காரணமாக தான் உயிரிழந்ததாக, டில்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் அலுவகத்தில் புகார் அளித்திருந்தார்.

இது சார்ந்த வழக்கில், மத்திய சுகாதாரத் துறையின் நோய் தடுப்பு மற்றும் தடுப்பூசி ஆய்வு குழு ஆய்வாளர்களின் ஆராய்ச்சி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில், நடிகர் விவேக், உயர் ரத்த அழுத்தம் காரணமாக, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, விவேக் மரணத்திற்கு தடுப்பூசி தான் காரணம் என்ற புகாருக்கு, மத்திய அரசு முடிவாக ஒரு முற்றுப்புள்ளியை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.