விதிமுறையை திரும்பப்பெற்றது பாரத ஸ்டேட் வங்கி!

0
186

மூன்று மாதங்களுக்கும் மேலாக கர்ப்பிணியாக இருக்கும் பெண்களை, பணிக்குத் தகுதியற்றவர்கள் என்று கூறி பணியில் சேரவிடாமல் தடுக்கும் வழிகாட்டுதல்களை பாரத ஸ்டேட் வங்கி திரும்பப் பெற்றுக்கொண்டது.

பாரத ஸ்டேட் வங்கி டிசம்பர் 31-ஆம் தேதியன்று வெளியிட்ட சுற்றறிக்கை ஒன்றில், மூன்று மாதங்களுக்கு மேல் கர்ப்பமாக இருக்கும் பெண்களை பணியில் சேர கட்டுப்பாடு விதித்திருந்தது.

இத்தகைய வழிகாட்டுதல்களை வெளியிட்டமைக்காக, டெல்லி மகளிர் ஆணையம் பாரத ஸ்டேட் வங்கி மூன்று மாதத்திற்கும் மேலாக கர்ப்பிணியாக இருக்கும் பெண்களை, “தற்காலிகமாக தகுதியற்றவர்கள்,” என்று அழைத்தது குறித்து மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் ட்வீட் செய்திருந்தார்.

அதில், “வங்கியின் நடவடிக்கை பாரபட்சமானது, சட்டவிரோதமானது. ஏனெனில் சட்டப்படி வழங்கப்படும் மகப்பேறு சலுகைகளை இது பாதிக்கும். இதைத் திரும்பப் பெறுமாறு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்,” என்று அவர் கூறியிருந்த அந்த சுற்றறிக்கையில், “அவர் தற்காலிகமாக தகுதியற்றவராகக் கருதப்படுவார். குழந்தை பிறந்த நான்கு மாதங்களு பின் அவர் பணியில் சேர அனுமதிக்கப்படலாம்,” என்று அந்தச் சுற்றறிக்கை கூறுவதாக டெல்லி மகளிர் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், “இது மிகவும் தீவிரமான ஒன்று. இந்த நடவடிக்கை சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020-ன் கீழ் வழங்கப்பட்ட மகப்பேறு சலுகைகளுக்கு முரணாக இருப்பதால், வங்கி பாரபட்சமாகவும் சட்டவிரோதமாகவும் இருப்பதாகத் தோன்றுகிறது,” என்றும் டெல்லி மகளிர் ஆணையத்தின் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.