நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

0
147

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது இதில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவை விட எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக அதிக இடங்களில் வெற்றி வாகை சூடியது.இது அப்போதைய ஆளும் தரப்பான அதிமுகவிற்கு கடும் அதிர்ச்சியாக இருந்தது.

இதனைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பின்னர் நடத்தப்படும் என்று ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு நோய்த்தொற்று, ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று பலர் உச்சநீதிமன்ற கதவுகளை கட்டத் தொடங்கினார்கள், இதனால் உச்ச நீதிமன்றத்தின் தலையீடு காரணமாக, சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம்.

அதன்படி கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது, அதன் வாக்கு எண்ணிக்கை கடந்த 22ஆம் தேதி நடந்தது இதில் ஆளும் கட்சியாக இருக்கிற திமுக பல இடங்களில் வெற்றி வாகை சூடியது.

இந்த நிலையில், இந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவு, கணக்கு, உள்ளிட்டவற்றை உரிய படிவத்தில் பராமரிக்க ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் படிவத்தை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 தினங்களுக்குள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும், இந்த தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களும் தங்களுடைய செலவு கணக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படி 30 நாட்களுக்குள் தேர்தல் கணக்குகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது தேர்தல் சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் 3 ஆண்டுகளுக்கு அடுத்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.