Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாநில பொது செயலாளர் செந்தில் குமார் தலைமையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் 7 பேர் மாலை அணிவித்து மரியாதை!

#image_title

மாநில பொது செயலாளர் செந்தில் குமார் தலைமையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் 7 பேர் மாலை அணிவித்து மரியாதை.

மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் வரவில்லை.

அண்ணல் அம்பேத்கர் 133 வது பிறந்தநாளையொட்டி சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

உயர்நீதி மன்ற உத்தரவை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் அழைத்து வரப்பட்டனர்.

பிறரை பற்றி கோஷங்கள் எழுப்ப மாட்டோம், வாத்தியங்கள் ஏதும் வாசிக்க மாட்டோம், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்த மாட்டோம், அம்பேத்கர் சிலைக்கு காவி உடை, சந்தனபொட்டு, விபூதி, குங்குமம் போன்றவற்றை அணிவிக்க மாட்டோம், என உத்தரவாதம் அளித்து பிரமாண பத்திரம் இந்து மக்கள் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

Exit mobile version