இந்த தேதியில் பள்ளிகளை திறக்க மாநில அரசு உத்தரவு !!

0
140

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவத் தொடங்கி, தற்போது வரை அதன் தாக்கம் நீடித்து வருகின்றது. இதனால் பள்ளி ,கல்லூரிகள், பல்கலைக்கழகம் ஆகிய அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், மாணவர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே கல்வி கற்கும் முறையை மத்திய மாநில அரசு மேற்கொண்டது.

ஆனால், தற்பொழுது மாநிலங்களில் கொரோனா நோய் கட்டுக்குள் இருப்பதனால், எந்த ஒரு மாநிலத்திலும் முழுமையான கல்வி செயல்பாடுகள் குறித்த அறிவிப்புகளை அந்த மாநில அரசு வெளியிட மறுத்தது . இந்நிலையில், தற்போது சில மாநிலங்களில் பள்ளிகள் திறப்பது குறித்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் உத்தரகண்ட் மாநிலத்தில் வரும் நவம்பர் 2 – ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்காக மட்டும் பள்ளி திறக்கப்படும் என்று உத்தரகண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்கள், தங்களது பெற்றோர்களிடம் ஒப்புதல் கடிதம் வாங்கிய பின்னரே கல்விக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.