மூன்றாம் அலைக்கு தயாராகும் மாநிலம்! இளைஞர்களுக்கு பயிற்சி!
கடந்த ஒன்றரை வருடங்களாக நாம் எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கும் கொரோனா தொற்று இரண்டாம் அலையே பயங்கரமாகவும், பலவிதங்களில் மக்களை அச்சுறுத்தியும் விட்டது. உலக மக்கள் அனைவரையும் ஒரே மாதிரி கஷ்டப்பட வைத்து விட்டது.
இதை தொடர்ந்து மருத்துவ நிபுணர்கள் மூன்றாம் அலை ஏற்படும் என்றும், அதில் குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு குறைவாக உள்ளவர்கள் அதிகளவு பாதிக்கப் படுவார்கள் என்றும் கூறி உள்ளது.
எனவே, மூன்றாம் அலை தாக்கும் என்ற காரணத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டெல்லியில் முதல் அமைச்சர் கெஜ்ரிவால், ஐந்தாயிரம் இளைஞர்களை மருத்துவ உதவியாளர்களாகவும், அதற்கான பயிற்சியளிப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
ஜூன் 28-ஆம் தேதி முதல் இந்த பயிற்சி தொடங்கவிருப்பதாகவும், முதல் கட்டமாக 500 இளைஞர்களுக்கு இரண்டு வாரங்கள் செவிலியர் பணி மற்றும் உயிர்காக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட விருப்பதாகக் கூறியுள்ளார்.
இந்த பயிற்சிக்கு வரும் இளைஞர்கள் 18 வயது நிறைந்தவர்களாகவும், பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களாகவும், இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
பணி இருக்கும் நாட்களை பொருத்து சம்பளங்கள் போடப்படும் எனவும் கூறி உள்ளார். ஜூன் 17 ம் தேதி முதல் இதற்கான விண்ணப்பங்கள் இணையத்தில் எடுத்து கொள்ளலாம் எனவும் கூறினார்.