மீனுக்கு விரிக்கப்பட்ட வலையில் சிக்கிய கடவுள் சிலை! குளத்தில் நிகழ்ந்த அதிசயம்!

0
106

திருவாரூர் அருகே குளத்தில்  இருந்து மீனாட்சி சிலை கண்டெடுக்கப்பட்டது. 

திருவாரூர் மாவட்டம் கமலாலய  குளமானது குத்தகைக்கு விடப்பட்டு மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டு வந்துள்ளது. இவ்வாறு இருக்கையில் நேற்று காலை குளத்தில் சில மீனவர்கள் மீன்பிடித்து வந்துள்ளனர். அப்போது குளத்தில் மீன்களுக்காக வீசப்பட்ட வலையில் உலோகத்தால் உருவாக்கப்பட்ட மீனாட்சி அம்மன் சிலை சிக்கியது.

இந்த சிலை சுமார் அரை அடி உயரத்துடனும், அழகிய கலை நயத்துடனும் இருக்க அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கபட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்தவர்கள் ஆராய்ச்சி செய்து இது செப்புச் சிலையாக இருக்கலாம் என கணித்தனர்.

அதன்பின் குளத்தை குத்தகைக்கு எடுத்திருந்த முன்னாள் நகரசபை துணைத்தலைவர் செந்தில் என்பவர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சிலையை பார்வையிட்டு பின் அதிகாரிகளுடன் சேர்ந்து திருவாரூர் டவுன்லோட் காவல்நிலையத்தில் சிலையை ஒப்படைத்தார்.

பின் அந்த சிலையானது தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து  அது ஐம்பொன்னால்  ஆன சிலையா ? அல்லது வேறு ஏதேனும் பகுதியில் இருந்து திருடப்பட்டு குளத்தில் வீசப்பட்டதா? பழங்காலத்து சிலையா ?உள்ளிட்ட கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.