Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாஸ்ட்டிவா இருங்க 150 தொகுதிகளில் நாம் தான் வெற்றி! எடப்பாடியுடன் ரகசியமாக போனில் பேசியது லீக்!

Stay Bastiva We just won in 150 constituencies! League secretly talked to Edappadi on the phone!

Stay Bastiva We just won in 150 constituencies! League secretly talked to Edappadi on the phone!

பாஸ்ட்டிவா இருங்க 150 தொகுதிகளில் நாம் தான் வெற்றி! எடப்பாடியுடன் ரகசியமாக போனில் பேசியது லீக்!

தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடந்து  முடிந்த நிலையில் தேர்தலின் முடிவை எதிர்பார்த்து அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.அந்தவகையில் முதலமைச்சர்  தன் சொந்த ஊரான எடப்பாடியில் அரசு பள்ளியில் வாக்களித்து விட்டு சேலத்திலேயே ஓய்வு பெற்று வருகிறார்.அதற்கடுத்து அமைச்சர்கள் சிலர் முதலமைச்சருக்கு போன் செய்து முடிவுகளை குறித்து பேசினர்.முதலில் அமைச்சர் விஜயபாஸ்கர்,கே.சி.வீரமணி,உதயகுமார் ஆகியோர் எடப்பாடியாரின் வீட்டுக்கு சென்று நேரில் சந்தித்து பேசினார்கள்.

அதன்பின் மற்ற அமைச்சர்கள் போனின் மூலம் எடப்பாடி பழனிசாமியுடன் பேசியுள்ளனர்.அந்தவகையில் ஜெயக்குமார்,தங்கமணி,வேலுமணி,சி.வி சண்முகம் ஆகியோர் எடப்பாடிக்கு தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று பாஸ்டிவ் பதிலை கூறியுள்ளனர்.இந்த அமச்சர்கள் கூரும்போது கடைசி நான்கு நாட்கள் நமக்கு தன் சாதகமாக இருந்தது,பெண்களின் வாக்குகள் அனைத்தும் நமக்குப் தான் போட்டிருக்காங்க என சுவைப்பட செய்தியாக கூறியுள்ளனர்.ஆனால் இதற்கு மாறாக மற்ற அமைச்சர்கள் கூறவில்லை.பாஜகவுக்கு எதிராக திமுக இருந்ததால்,பாஜக கூட்டணியான நாம் கவிழும் நிலை வந்துவிட்டது என்று கூறியுள்ளனாராம்.

பாமக ஓட்டுக்கள் நமக்கு விழுந்த மாறி தெரியல என வருத்தத்துடன் கூறியுள்ளார்.அதேபோல நம்ப ஓட்டும் பாஜகவுக்கும்,பாமகவுக்கும் முழுசா விழுந்துள்ளதா என்பதும் சந்தேகமாக தான் இருக்கு என்று யான எடப்பாடி பழனிசாமி புலம்பியுள்ளார்.அமைச்சர்கள் உங்கள் தொகுதிகளை மட்டும் நீங்கள் பார்த்துக்கிட்டீங்க என வருத்தத்துடன் போனில் பேசினாராம்.இவர்களுடன் பேசியதை போல பாமக தரப்பிலிருந்தும் தேர்தல் முடிவுகளை குறித்து பாமக ராமதாஸ்-யிடம்பேசியுள்ளார்.

அப்போ ராமதாஸ் ரொம்ப நம்பிக்கையாக பேசி இருக்காராம்.எப்போதும் இல்லாதவாறு இந்த முறை பாமக ஓட்டு அதிமுகவுக்கும்,அதிமுக ஓட்டு பாமக வுக்கும் பரிமாறி உள்ளது என கூறியுள்ளார்.அதனால் நீங்கள் கவலை பட தேவையில்லை.கண்டிப்பாக 150 தொகுதிகளில் நாம் தான் வெற்றி பெறுவோம் என்று பாஸ்டிவாக கூறியுள்ளார்.இவரைபோலவே பாஸ்டிவான பதிலை எடப்பாடியின் தேர்தல் ஆலோசகரான சுனில் தரப்புக் கூறியுள்ளதாம்.அவர் கூறியது,இரண்டு முறை ஆட்சியில் இருந்தால் மக்கள் மாற்றத்தை எதிர் பார்த்து வேறோரு கட்சிக்கு ஒட்டு போடத்தான் செய்வார்கள்.ஆனால் கடைசி நேரத்தில் செய்த விளம்பரங்கள்,வாக்காளர்களுக்கான கவனிப்பாலும் 120 சீட் வரை வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திடலாம் என கூறியுள்ளார்.

இதே சமயத்தில் மற்றவர்களிடம் ஆலோசிக்கும் போது 50 சீட்டிலிருந்து 80 சீட்டு வரை அதிமுக வுக்கு கிடைக்கும்னு சுனில் தரப்பினர் கூறுகின்றனராம்.இந்த இரட்டை ரிப்போர்டால் இரட்டை இழை கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாம்.

Exit mobile version