படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை இன்னும் கிடைக்கவில்லையா? இதோ உங்களுக்கான அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!
படித்துவிட்டு படித்த படிப்பிற்கு ஏற்ற வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் அரசின் உதவி தேவை தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் சார்பாக படித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி பள்ளி இறுதி வகுப்பு 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ. 200, பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300. இதையடுத்து மேல்நிலைக்கல்வி பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.400 மற்றும் ஏதேனும் ஒருஇளநிலை பட்டப் படிப்பு படித்த பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் உதவி தொகை ரூ.600 என தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டிற்கு மேல் மாணவர்களுக்கு இந்த உதவி தொகை மேலும் கூடுதலாக கிடைக்கும். இந்நிலையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதற்கான வயது வரம்பாக பொது பிரிவினர் 40 வயதிற்கு மிகாமலும் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் 45 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும் இவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72000 அதிகமாக இருக்கக் கூடாது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே படித்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.