தீயினால் பட்ட காயம் இன்னும் ஆறவில்லையா? அப்போ இதை மட்டும் பண்ணுங்க! 

0
319
Still not healed from the fire injury? Then just do this!
தீயினால் பட்ட காயம் இன்னும் ஆறவில்லையா? அப்போ இதை மட்டும் பண்ணுங்க!
நம்மில் பலருக்கும் சில சமயங்களில் தீயினால் காயங்கள் ஏற்படும். அதுவும் பொதுவாக சமையல் கட்டில் வேலை செய்யும் பெண்களுக்கு தீக்காயம் ஏற்பட வாய்ப்பு அதிகம். சில சமயங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என்று யாருக்கும் தெரிவது கிடையாது.
தீக்காயங்கள் ஏற்பட்டால் அதற்கு தகுந்த முதலுதவி செய்து பின்னர் சிகிச்சை பெறுவதற்காக தீக்காயம் ஏற்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். மருத்துவர்கள் கொடுக்கும் மருந்திலும் தீக்காயம் ஆறவில்லை என்றால் நாம் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் மருந்தை பயன்படுத்தலாம்.
இந்த மருந்தை தயார் செய்வது மிகவும் எளிமையான செயலாகும். மேலும் இந்த மருந்தை தயார் செய்ய வெறும் இரண்டு பொருட்கள் போதும். அது என்னென்ன பொருட்கள் எவ்வாறு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* தயிர்
* வேப்பங்கொழுந்து
செய்முறை:
ஒரு மிக்சி ஜார் ஒன்றை எடுத்து அதில் வேப்பங்கொழுந்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் சிறிதளவு கெட்டியான தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த இந்த விழுதை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் சிறிதளவு வைக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் தீக்காயம் விரைவாக ஆறிவிடும். ஆறாத காயங்கள் வேறு எதாவது இருந்தாலும் இந்த மருந்தை வைத்தால் விரைவில் ஆறிவிடும்.