Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

 பான் எண்ணுடன் ஆதாரை இன்னும் இணைக்கவில்லையா?? மத்திய அரசு  விடுத்த  இறுதி எச்சரிக்கை!!

Still not linking Aadhaar with PAN?? Final warning issued by the central government!!

Still not linking Aadhaar with PAN?? Final warning issued by the central government!!

பான் எண்ணுடன் ஆதாரை இன்னும் இணைக்கவில்லையா?? மத்திய அரசு  விடுத்த  இறுதி எச்சரிக்கை!! 

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மத்திய அரசு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. இல்லையெனில் நாளை முதல் உங்கள் பான் அட்டை மதிப்பை இழந்து விடும்.

தற்போது ஏற்படும் மோசடிகளை தடுக்கும் வகையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. ஒருவரே பல பான் அட்டைகளை பெற்று வருமான வரித்துறை கணக்கில் மோசடி செய்துள்ளதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனால் 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி வரை பான் அட்டை வாங்கியவர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசு ஆணை பிறப்பித்தது.

இதற்கு வருமான வரித்துறையின் கீழ் மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் காலக்கெடு விதித்து பின்னர் அதற்க்கான கால நீட்டிப்பு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு கொண்டே இருந்தது.

எனவே பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்றே கடைசி நாளாகும்.அப்படி நீங்கள் ஆதார் எண்ணை இணைக்கவில்லை எனில் நாளை முதல் உங்களது பான் அட்டை செல்லாமல் போகும்.

மேலும் இதன் காரணமாக ஒருவர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய இயலாது போய்விடும். அதன் காரணமாக ஏற்படும் பின் விளைவுகளுக்கு சம்பந்தப்பட்ட நபரே பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஏற்படும் என மத்தியில் உள்ள நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

Exit mobile version