பங்கு சந்தை இன்று!! டெக் மஹிந்திரா லாபத்தில் முதலிடம் !! பஜாஜ் பின்சர்வ் 1.5% வீழ்ச்சி!!
இந்திய பங்கு சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வாரத்தின் கடைசி வர்த்தக நாள் வெள்ளிக் கிழமையான இன்று கலப்பு உலகளாவிய குறிப்புகளுக்கு இடையில் பச்சை நிறத்தில் வர்த்தக அமர்வைத் தொடங்கின. எஸ்&பி பிஎஸ்இ சென்செக்ஸ் 52,700 புள்ளிகளை கடந்தது, நிஃப்டி 50 இன்டெக்ஸ் 15,800 புள்ளிகளுக்கும் கீழே இருந்தது. வங்கி நிஃப்டி 34,640 க்கு அருகில் சிவப்பு நிறத்தில் இருந்தது அதாவது வர்த்தகம் இழப்புகளை சந்தித்து வருகின்றது. பரந்த சந்தைகள் பச்சை நிறத்தில் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் பெஞ்ச்மார்க் குறியீடுகளை விட சிறப்பாக இருந்தன.
அதிக லாபம் ஈட்டியவர்கள் :(Top Gainers)டெக் மஹிந்திரா நிருவனம் அதன் காலாண்டு முடிவுகளின் உதவியால் இன்று காலை 7 சதவிகிதம் உயர்ந்து சென்செக்ஸ் லாபத்தில் முதலிடம் பெற்றது. HCL டெக்னாலஜிஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன் மற்றும் HDFC ஆகிய நிறுவனங்கள் அடுத்த அடுத்த நிலையில் லாபத்தை ஈட்டியுள்ளது.
அதிக இழப்பை சந்தித்தவர்கள் :(Top Losers) பஜாஜ் பின்சர்வ் 1.5% வீழ்ச்சியடைந்தது, மேலும் இண்டஸ்இண்ட் வங்கி, பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல் மற்றும் ஆசிய பெயிண்ட்ஸ் நிறுவனங்கள் அதிக இழப்புகளை சந்தித்தது.
ரோலக்ஸ் ரிங்ஸின் ஐபிஓ க்கு ஏலம் எடுக்க இன்று தான் கடைசி நாள். இந்த பங்கை அந்நிறுவனம் இதுவரை 9.26 முறை சந்தா செய்துள்ளது. இதில் சில்லறை முதலீட்டாளர்களே இதுவரை அதிகமான விலைக்கு ஏலம் எடுத்து உள்ளனர், அவர்களின் ஒதுக்கீட்டிலிருந்து 15.88 முறை சந்தா செலுத்தியுள்ளனர். மேலும் நிறுவனமல்லாத முதலீட்டாளர்கள் (என்ஐஐ) 5.85 தடவைகள் முழுமையாக சந்தா செலுத்தியுள்ளனர்.
தகுதிவாய்ந்த நிறுவனம் வாங்குபவர்கள் (QIB) இன்னும் தங்கள் பகுதியை முழுமையாகப் பதிவு செய்யவில்லை. QIB ஒதுக்கீடு 0.23 முறைக்கு மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் 16 பங்குகளின் ஏலத்தில் ஒரு பங்குக்கு ரூ .800 – 900 என்ற விலைப்பட்டியலில் இன்று IPO க்கு ஏலம் எடுக்கலாம்.