வயிற்றை சுத்தம் செய்யும் மரவள்ளி கிழங்கு!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன என்று பாருங்க!!!
உணவுப் பொருள்கள் ஒவ்வொன்றிலும் பல நன்மைகள் உள்ளது. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு நோயை குணப்படுத்தும் மருத்துவ குணத்தையும் கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த பதிவில் மரவள்ளி கிழங்கு மூலமாக கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மரவள்ளி கிழங்கு என்பது மண்ணுக்கு அடியில் விளையக் கூடிய கிழங்கு வகையாகும். இந்த கிழங்கை மருந்தாக பயன்படுத்தலாம். இதில் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் உள்ளது.
இந்த மரவள்ளிக் கிழங்கில் கார்போஹைட்ரேட் சத்துக்கள், கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளது. இந்த மரவள்ளிக் கிழங்கை நாம் சாப்பிடும் பொழுது நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இனி பார்க்கலாம்.
மரவள்ளி கிழங்கின் மூலமாக கிடைக்கும் நன்மைகள்…
* மரவள்ளி கிழங்கை சாப்பிடுவது மூலமாக இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து விடுகின்றது. மேலும் மெட்டபாலிசம் என்று அழைக்கப்படும் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கும்.
* மரவள்ளிக் கிழங்கை சாப்பிடுவதன் முலமாக இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கின்றது. இதன் மூலம் இரத்த ஓட்டத்தை சீராக்குகின்றது. மேலும் இரத்தத்தில் உள்ள நச்சுக் கொழுப்புகளை அழித்து விடுகின்றது.
* மரவள்ளிக் கிழங்கை சாப்பிடுவதால் இது குடலை சுத்தம் செய்கின்றது. அதாவது குடலில் தேங்கி இருக்கும் கழிவுகளை வெளியேற்றுகின்றது.
* க்ளூட்டன் அலர்ஜி உள்ளவர்கள் மரவள்ளிக் கிழங்கு சாப்பிடுவதால் அவர்களுக்கு ஏற்படும் வலிகளை குறைக்கின்றது. மேலும் பல நன்மைகளை அளிக்கின்றது.
* மரவள்ளிக் கிழங்கை சாப்பிடுவதன் முலமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
* மரவள்ளிக் கிழங்கில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் உள்ளது. இதனால் மரவள்ளிக் கிழங்கு சாப்பிடும் பொழுது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து வெளியேறுகின்றது. இதன் மூலமாக உடல் எடையை குறைக்கலாம்.