கல் இறக்க அனுமதி.. உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு!! உள்துறை செயலாளருக்கு பறந்த அதிரடி உத்தரவு!! 

0
250
Stone allowed to die.. Sensational case in High Court!! The action order flew to the Home Secretary!!

கல் இறக்க அனுமதி.. உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு!! உள்துறை செயலாளருக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

தமிழ்நாட்டில் கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து பல பொது மக்கள் உயிர் இழந்துள்ளனர்.நாளுக்கு நாள் உயிர் இழப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது,மேலும் பலர் அரசு மருத்துவமனைகளில் குறிப்பாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

இவர்கள் உயிர் பிழைத்து வர வேண்டுமென இவர்களின் உறவினர்கள் மருத்துவமனைகளிலேயே இரவு பகலாக தங்கி இருந்து கவனித்து வருகின்றனர்.
தமிழக அரசுக்கு எதிராகக் எதிர் கட்சிகள் சட்ட சபையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.மேலும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்காக அவர்கள் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து மனு அளித்துள்ளனர்.இந்த நிலையில் தமிழகத்தில் பனையிலிருந்து கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க உத்தரவிட வேண்டும் என புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். பனை மரத்திலிருந்து கிடைக்கும் ‘கள்’ தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் தான் கள்ளச்சாராய மரணம் அதிகமாக ஏற்பட்டுள்ளது என ஒரு சில பனை வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் பனைமரத் தொழிலை நம்பி இருக்கும் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தடை செய்யப்பட்ட கள்ளிற்கு மீண்டும் உரிமம் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த விவகாரம் தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை செயலாளர் பதில் அளிக்க வேண்டுமென மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.