Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரபல அரசியல் தலைவர் மீது கல் வீச்சு! கடும் கோபத்தில் ஆதரவாளர்கள்

Stones pelted at ex-Andhra Pradesh CM Chandrababu Naidu

Stones pelted at ex-Andhra Pradesh CM Chandrababu Naidu

பிரபல அரசியல் தலைவர் மீது கல் வீச்சு! கடும் கோபத்தில் ஆதரவாளர்கள்

கடந்த 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நடந்து முடிந்துள்ளது.இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுக்காக அனைவரும் எதிர்பார்த்திருக்கும் சூழலில் பிரபல அரசியல் கட்சி தலைவர் மீது கல் வீச்சு நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

வருகிற 17 ஆம் தேதி திருப்பதி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு தெலுங்கு தேசம் கட்சியின் சார்பாக பனபாக லட்சுமி போட்டியிடுகிறார்.இதனையடுத்து வேட்பாளர் பனபாக லட்சுமியை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வதற்காக ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று மாலை 5 மணியளவில் திருப்பதி ரெயில் நிலையம் முன்பு வந்தார்.

 

அப்போது அவர் தலைமையில் வேட்பாளரை ஆதரித்து அவரது கட்சியினர் ஊர்வலம் நடத்தினர்.இந்த ஊர்வலத்தில் நடந்து சென்ற சந்திரபாபு நாயுடு மீது மர்மநபர்கள் சிலர் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத சந்திபாபுநாயுடு கீழே குனிந்து கல்வீச்சிலிருந்து தப்பித்தார். சந்திரபாபு நாயுடுவிற்கு எதிராக நடத்தப்பட்ட இந்த கல்வீச்சில் அக்கட்சியின் தொண்டர் ஒருவர் காயம் அடைந்தார்.

இதனையடுத்து இந்த சம்பவத்தை கண்டித்து சந்திரபாபு நாயுடு தனது ஆதரவாளர்களுடன் திடீரெனச் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள் அவர்களிடம் சமசர பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து அங்கு மறியலில் ஈடுபட்டிருந்த சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது கட்சியினர் போராட்டத்தை கைவிட்டனர்.
Exit mobile version