கெட்டவர்களுக்கு முற்றுப்புள்ளி! தோனி பட ஹீரோவின் வாழ்க்கை படமாகிறது!

0
133

சுஷாந்த் சிங் ராஜ்புத் வாழ்கை திரைப்படமாக எடுக்க பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் குப்தாமுடிவு செய்துள்ளார்.

 பாலிவுட் சினிமா  10 வருடங்களுக்கு முன் ரவுடிகள் கட்டுப்பாட்டில் இருந்ததாக சொல்லப்பட்டு வருகிறது.அவர்கள் அனைவரும் தேடப்படும் குற்றவாளிகள் ஆன பின் அண்டையநாடுகளுக்கு சென்றுவிட்டதால்  ,சமீபகாலமாக பாலிவுட்சினிமா உலகம் தற்போது ரவுடிகள் கையிலிருந்து தப்பி பெரிய நடிகர்கள் பிடியில் மாட்டிக்கொண்டது. அந்த வகையில், 

பாலிவுட் நடிகர்கள் அடக்குமுறையிலும் சினிமாவில் கஷ்டப்பட்டு வளர்ந்து வந்த இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத், இவர்களது ஆதக்கத்தினால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக  புகார்கள் பல வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட  சுஷாந்த் சிங் ராஜ்புத் அவரது வாழ்க்கையை வைத்து பயோ படம் எடுக்கப்போவதாக பாலிவுட் தயாரிப்பாளர் விஜய் சேகர் குப்தா செய்தி வெளியிட்டுள்ளார். அதில், 

இப்படத்திற்கு Suicide Or Murder [தற்கொலை or கொலை] என பெயர் வைத்ததுடன், அதற்கு விளம்பர போஸ்டர்களையும் பகிர்ந்து அது தற்போது வைரலாகி வருகிறது. மேலும்இப்படத்தின் மூலம்  பாலிவுட் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர்கள் மற்றும் தயாரிப்பாள்ர்களின் அடக்குமுறைக்கு ஒரு முடிவு கிடைக்கும் என்று ஆக்ரோஷமாக கூறிய தயாரிப்பாளர் குப்தா, இந்தப் படத்தை சாமி மாலிக் என்பவர் டைரக்ட் செய்கிறார் என்பதையும் தெரிவித்துள்ளார்.