கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் வாந்தியை நிறுத்த! கேரட் மற்றும் தேன் மட்டும் போதும்!
கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு குமட்டல், வாந்தி ஆகியவை ஏற்படும். அந்த சமயங்களில் கர்ப்பிணி பெண்கள் என்ன செய்வது என்று நெரியாமல் வாந்தி மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவார்கள். அவ்வாறு மாத்திரைகள் சாப்பிடும் பொழுது சில சமயங்களில் அவர்களுக்கு சேராது.
எனவே அவர்களுக்கு ஏற்படும் வாந்தி மற்றும் குமட்டல் பிரச்சனைகளை குணமாக்க கேரட் மற்றும் தேன் இரண்டையும் பயன்படுத்தலாம். இந்த இரண்டு பொருட்களை அவர்கள் பயன்படுத்தும் பொழுது வாந்தி குமட்டல் பிரச்சனை சரியாகும். அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* கேரட்
* தேன்
செய்முறை…
ஒரு மிக்சி ஜார் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் கேரட்டை சிறிது சிறிது துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதை வடிகட்டி இதிலிருந்து கேரட் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு டம்ளரில் கேரட் சாற்றை சேர்த்து இதனுடன் சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாக கலந்து விட்டு குடிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் வாந்தி, குமட்டல் பிரச்சனை உடனே சரியாகும்.