#StopHatredAgainstVanniyars வன்னியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம்! வெகுண்டெழுந்த பாமகவினர்

0
288

#StopHatredAgainstVanniyars வன்னியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம்! வெகுண்டெழுந்த பாமகவினர்

 

சமீபத்தில் அரக்கோணம் பகுதியில் இரு தரப்பினர் குடி போதையில் சண்டையிட்டு கொண்டதில் இருவர் உயிரிழந்தனர்.இந்த சம்பவத்தை கண்டித்து அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், பொது மக்களும் கண்டித்து வந்த நிலையில் வழக்கம் போல இறந்தவர் தலித் சமுதாயத்தை சார்ந்தவர் என்று தெரிந்ததும் இதற்கு சாதி தான் காரணம் என்றும்,அதுவும் பாமகவும், வன்னியர்களும் தான் காரணம் என்றும் அவதூறு பிரச்சாரத்தை விசிக தலைவர் திருமாவளவன் மேற்கொண்டார்.

 

இந்நிலையில் தான் ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி சிவகாமி தலைமையிலான உண்மை கண்டறியும் குழு இதற்கும் பாமகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிவித்தது. இதன் பிறகும் பாமக மற்றும் வன்னியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

 

இது தற்போது மட்டுமல்லாமல் கடந்த காலங்களிலும் பலமுறை நடந்துள்ளது என்பதை வெளி உலகுக்கு உணர்த்த பாமகவினர் கடந்த கால நிகழ்வுகளை ஆதாரத்துடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.அந்த வகையில் டிவிட்டரில் #StopHatredAgainstVanniyars என்ற ஹேஷ் டேக்கில் பாமகவினர் மேற்கொண்ட இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் 1 லட்சம் பதிவுகளை தாண்டி தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.இந்த பிரச்சாரத்தின் வழியாக அவர்கள் அரசாங்கத்திடம் வைக்கும் வேண்டுகோள்.

 

கொரோனா தாக்குதல் ஒரு மிகப்பெரிய பேரழிவை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இந்த ஆபத்தினை ஓரிரு மாதங்களில் அல்லது ஓரிரு ஆண்டுகளில் முறியடித்து விடலாம்.

 

ஆனால், மக்கள் சமூகங்கள் மீது வீசப்படும் வெறுப்பு பேரழிவு இன்னும் பலப்பல தலைமுறைகள் காலத்திற்கு நம்மை பாதிக்கும்.

 

வன்னியர்கள் மீதும் பாமக மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்துவதும், பிறகு அது அப்பட்டமான பொய் என்று நிரூபிக்கப்பட்ட பின்னரும் அதனை கண்டுகொள்ளாமல், அடுத்து வேறொரு அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்துவதும் தமிழ்நாட்டின் வெறுப்பர் கூட்டத்தின் வழக்கமாக உள்ளது.

 

இந்த இழிவான நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அரக்கோணம் விவகாரத்தில் வன்னியர்கள் மீதும் பாமக மீதும் குற்றம் சுமத்தியவர்கள் மீது (1) அரசு வழக்குப்பதிவு செய்ய வேண்டும், (2) அவர்கள் செய்த குற்றத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.

 

இது சம்பந்தமாக டிவிட்டரில் வெளியான சில பதிவுகள்.