நாளை கரையை கடக்கும் மோக்கா புயல்!! தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை!!
தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்து, வடக்கு திசை நோக்கி நகர்ந்து, நேற்று அதி தீவிரமான புயலாக மாறியுள்ளது மோக்கா புயல். இது மத்திய மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டு, தற்போது போர்ட் பிளேயரில் இருந்து, மேற்கு-வடமேற்கு திசையில் நிலை கொண்டுள்ளது.
மேலும் இது வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து, கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுப்பெற்று, நாளை நண்பகலில் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையில் 150 கி.மீ. முதல் 175 கி.மீ. வேகத்தில் இந்த மோக்கா புயல் கரையை கடக்கிறது.
இதன் காரணமாக ஏற்படும் வெப்ப சலனத்தால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று மே 12ம் தேதி முதல் மே 16ம் தேதி வரையிலான நான்கு நாட்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.