Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வரும் 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்து வருகின்றது. இதனால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகின்றது தமிழ்நாட்டில் இயல்பை விட சராசரியாக 83% அதிகமாக மழை பெய்திருக்கிறது அதன் அடுத்த கட்டமாக தமிழ்நாட்டில் நேற்று முதல் மழை சற்று குறைந்து வருகிறது. அதனுடைய இரண்டு நாட்களுக்கு மழை குறைந்து தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்சமயம் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிறைய வரும் வரை மேல் அடுக்கு சுழற்சி குமரி கடல் பகுதி வரையில் நீடிப்பதால் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

அதன் அடிப்படையில், இன்றைய தினம் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் ஒரு பகுதியில் இலேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது இந்த சூழ்நிலையில், அந்தமான் கடல் பகுதியில் உருவாகியிருக்கின்றது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. தாழ்வு மண்டலம் உருவான அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்கக் கடல் பகுதியில் புயலாகவும் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், கூறப்பட்டுள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 4ஆம் தேதி அதிகாலை வட ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையில் இருந்து கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

இதனால் தமிழ்நாட்டிற்கு கனமழை காண எச்சரிக்கை எதுவும் இல்லை. ஆனாலும் அந்தமான் கடல் பகுதியில் மற்றும் அந்தமான் தீவு உள்ளிட்ட பகுதிகளில் இன்றும், தென்கிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நாளையும், மத்திய வங்கக் கடல் பகுதியில் நாளை மறுநாளும், வரும் 4ஆம் தேதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய வட மேற்கு வங்க கடல் பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே மீனவர்கள் இந்த தினங்களில் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Exit mobile version