Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கதை ரெடி! 2ஆம் பாகத்தில் நடிப்பாரா சூர்யா?

24 திரைப்படத்தின் 2ஆம் பாகத்தை அப்படத்தின் இயக்குனர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டைம் டிராவல் கதையை மையமாகக் கொண்டும், மூன்றுவித கதாபாத்திரத்திலும் அசத்தலாக நடிகர் சூர்யா, சமந்தா உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம் 24. இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்று கூறும் போது, அவரது ரசிகர்கள் இதனை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், இந்த படத்தின் மூலம் ஏராளமான நஷ்டத்தை சூர்யா சந்தித்தார் என்பது அவர் அறிந்ததே.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதை தயாராகி விட்டதாகவும் அதை விரைவில் படமாக உள்ளதாகவும் 24 திரைப்படத்தின் இயக்குனர் விக்ரம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சூர்யா வட்டாரங்கள் தெரிவித்ததாவது, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் சூர்யாவின் மார்க்கெட் சற்று சரிந்துள்ளது.

அதற்கான காரணம் அவர் தொடர்ந்து தோல்விப் படங்களை கொடுத்து வந்ததுடன், சூரரைபோற்று திரைப்படத்தின் மூலம் அவர் மீண்டும் சினிமாவில் மிகப்பெரிய மார்க்கெட்டை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் இயக்குனர் ஹரி மற்றும் பாண்டியராஜ்  ஆகியோர் இயக்கும் படத்தில் நடித்து விட்டு, அதற்குப் பின்பு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version