வட இந்தியாவில் பல இடங்களில் இன்றளவும் பலவிதமான மூட நம்பிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தீபாவளி அன்று விலை கொடுத்து 60000 ஆந்தைகளை வாங்கி கொல்லும் பழக்கமும் தற்போது வரையில் பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் செல்வ செழிப்புடன் வாழ முடியும் என்று மக்கள் நம்புவதாக கூறப்படுகிறது.
வட இந்தியாவை பொருத்தவரையில் தீபாவளி பண்டிகை 5 நாட்களாக கொண்டாடப்படுகிறது. மேலும் இதன் முக்கிய அம்சமாக லட்சுமி கடவுளின் வருகை குறிப்பிடப்படுகிறது. தீபாவளி பண்டிகை என்று லட்சுமிதேவி ஒவ்வொருவரின் வீட்டிற்கும் வந்து செல்வார் என்பது அவர்களது நம்பிக்கையாக உள்ளது.
இந்துக்களின் நம்பிக்கையின் படி லட்சுமியின் வாகனம் ஆந்தையாக கருதப்படுகிறது. இந்நிலையில் தங்களது வீட்டிற்கு வரும் லக்ஷ்மி தேவியை தங்களது வீட்டிலேயே தங்க வைத்துக் கொள்ள லக்ஷ்மி தேவியின் உடைய வாகனமான ஆந்தையை கொள்ளும் வினோதமான பழக்கத்தை வட இந்திய மக்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்தைகளை வேட்டையாடுவதற்காக பழங்குடியின மக்களை பயன்படுத்துகின்றனர். மேலும் இவர்களிடமிருந்து குறைந்த அளவு பணத்தை கொடுத்து ஆந்தைகளைப் பெற்றுக் கொண்டு அதனை ஐம்பதாயிரம் முதல் விற்பனை செய்து வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் 36 வகையான ஆந்தை இனங்கள் உள்ளன. அதில் 15 வகையான ஆந்தை இனங்கள் வேட்டையாடப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது. இதனை தடுக்க வனத்துறையினரும் காவல்துறையினரும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், மக்களின் இந்த மூடநம்பிக்கை காரணமாக இன்றளவும் ஆந்தைகள் கொல்லப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.