அதிசயமும், அதிர்ச்சியும் மனிதன் தன் வாழ்நாளில் ஒரு தடைவையாவது காண முடியும் அதுவும் அமெரிக்காவில் வாழும் மக்களுக்கு அந்த நிகழ்வை அடிக்கடி காண்பார்கள். கலிஃபோர்னியாவின் பல பகுதிகளில் மக்கள் காலையில் எழுந்தவுடன் ஆரஞ்சு நிற ஆகாயத்தைப் பார்த்த மக்களிடையே உலக அழிவு பற்றிய பயம் ஏற்பட்டது. காலை நேர வானம் இருள் சூழ்ந்திருந்தது; அதைப் பார்ப்பதற்கு இரவு நேரம் போலிருந்ததாக மக்கள் குறிப்பிட்டனர்.
சில இடங்களில் பனித்துளிகள் போல் சாம்பல் வானத்திலிருந்து தரையில் விழுந்தன. பயங்கரத் தோற்றத்துடன் காட்சியளித்த வானத்தைப் பலரும் படம் பிடித்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தனர். தற்போது அந்தப் படங்கள் இணையத்தில் ‘காட்டுத் தீ’ போல பரவிக்கொண்டிருக்கின்றன. சிலர் ஆரஞ்சு நிறம் வானத்தைச் சரியாக வருணிக்கவில்லை….அது கறும் ஆரஞ்சு நிறத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டனர்.