கழுத்தை நெரித்த கடன் பிரச்சனை!! வயதான கணவன் மனைவி விபரீத முடிவு!!

0
148
Strangled Debt Problem!! Husband and wife tragic decision!!

கழுத்தை நெரித்த கடன் பிரச்சனை!!  வயதான கணவன் மனைவி விபரீத முடிவு!! 

செங்கல்பட்டு மாவட்டம் அருகே  ஊரப்பாக்கம் அடுத்த காரணைபுதுச்சேரி, ஜெயேந்திர சரஸ்வதி ஜெயராம் நகர், அக்ஷயா குடியிருப்பில் வசித்துவருபவர்  கருத்தோவியன்வயது67. இவரது மனைவி மஞ்சுளாவயது  55. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் அவர்கள் இருவருக்கும் திருமணமாகி அருகிலேயே தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். கருத்தோவியன் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

கணவன், மனைவி இருவரும்தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்தில் வசிப்பவர்கள் அவர்களது மகன்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது.

இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கே அறையில் கருந்தோவியன் தூக்கில் தொங்கிய நிலையிலும் அவரது மனைவி மஞ்சுளா வாயில் நுரை தள்ளியபடியும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இருவரும் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்ததும் மகன்கள் இருவரும் கதறி துடித்தனர்.

இந்த சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து இரண்டு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்த தம்பதி மகளிர் குழுவில் கடன் வாங்கியதால், கடனை திருப்பி செலுத்த போதிய வருமானம் இல்லாததால் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.

மேலும் கணவன் மனைவி இருவருக்கும் உடல்நிலை பாதிப்பும் இருந்து வந்துள்ளது. கருந்தோவியனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இதய அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அவரது மனைவி மஞ்சுளாவும் சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த சூழ்நிலையில்தான் மன வருத்தத்தில் இருந்த தம்பதி இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கணவன் மனைவி இருவரும் கடன் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டனரா?? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.