வலுவடைகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!

0
147

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள இந்திய வங்கக்கடல் பகுதியில் நேற்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஒரு சில பகுதிகளிலும் இன்று அனேக பகுதிகளிலும், நாளை மற்றும் நாளை மறுநாள் வரும் 13-ஆம் தேதி பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி தமிழகம் புதுவை கடற்கரையை நோக்கி வடமேற்கு திசையில் நகர்வதற்கான வாய்ப்பு உள்ளது. என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வரும் 14ஆம் தேதி வரையில் கனமழை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாளை முதல்வரும் 13-ஆம் தேதி வரையில் தமிழகத்தில் ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வடகிழக்கு பருவமழை தற்போது மேலும் தீவிரமடைய தொடங்கி இருப்பதால் தென் மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது.

தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய இந்திய பெருங்கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 4.5 கிலோமீட்டர் உயரம் வரையில் நிலை கொண்ட காற்று சுழற்சி நேற்று காற்றழுத்தமாக உருமாறியது. அது மன்னார் வளைகுடா பகுதி மற்றும் வட இலங்கை பகுதியை நெருங்கி வந்தது. அதோடு தென்கிழக்கு வங்க கடல் பகுதிக்கு வந்து வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது என கூறப்பட்டுள்ளது.

ஆகவே டெல்டா மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ததற்கான வாய்ப்பு உள்ளது அதோடு இன்று நள்ளிரவு முதல் வட தமிழகத்திலும் மழை பெய்யும் வரும் 14ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

குறிப்பாக கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் மாவட்டம் வரையில் கனமழை பெய்யும் இதை தவிர கேரளா, தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடகா, பகுதிகளிலும் வரும் 11, 12, 13 உள்ளிட்ட தேதிகள் வரையில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.