தமிழகத்தில் ‘ஸ்ட்ரைக்’! இந்த தேதியில் பேருந்துகள் இயங்காது – போக்குவரத்து துறை அறிவிப்பு!!
ஜனவரி முதல் வாரத்திற்குள் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற விட்டால் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று CITU பொதுச் சங்க செயலாளர் ஆறுமுக நயினார் தெரிவித்து எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.
கடந்த 1972 ஆம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்ட போக்குவரத்து துறையின் கீழ் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து துறையில் சுமார் 1.3 லட்சம் பணியாளர்கள் வேலை பார்த்து வரும் நிலையில் அவர்கள் தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்பொழுது தமிழகத்தை ஆளும் திமுக அரசு போக்குவரத்து துறை ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் தமிழக போக்குவரத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை நடத்த வேண்டும், வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த CITU பொதுச் சங்க செயலாளர் ஆறுமுக நயினார் அவர்கள் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி அரசு பேருந்துகள் இயங்காது என்று வேலைநிறுத்த அறிவிப்பு குறித்து தெரிவித்தார்.