தற்பொழுது உலகலில் கோடிக்கணக்கான மக்கள் பக்கவாத நோயால் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
நம் மூளைக்கு பயணிக்கும் இரத்தக்குழாயில் வெடிப்பு உண்டாகி இரத்த ஓட்டம் நின்று மூளையின் செயல்பாடுகளில் தடுமாற்றம் ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படுகிறது.இதனால் உடலில் ஒரு பக்க உறுப்புகள் மெல்ல மெல்ல செயலிழக்க தொடங்கிறது.
மூளையின் ஏற்பட்டுள்ள இரத்த குழாய் அடைப்பு அல்லது இரத்த குழாய் வெடிப்பை பொறுத்து பக்கவாதத்தின் தீவிரம் இருக்கும்.பக்கவாதம் குழந்தைகள்,பெரியவர்கள் என்று யாருக்கு வேண்டுமானாலும் வரக் கூடிய ஒன்றாகும்.
பக்கவாததிற்கான காரணங்கள் இதோ:
*பரம்பரைத் தன்மை
*புகைப்பழக்கம்
*மதுப் பழக்கம்
*ஹை பிபி
*வயது முதுமை
*தீவிர சர்க்கரை நோய்
*சிறுநீரக நோய்
*உடல் பருமன்
*விபத்து மற்றும் அடிபடுதல்
பக்கவாத அறிகுறிகள் எப்படி இருக்கும்?
*பேச்சில் தடுமாற்றம்
*திடீர் தலைவலி
*வாய் ஒருபக்கம் இழுத்தல்
*அதிக வியர்வை
*கை மற்றும் கால் நடுக்கம்
*நரம்பு தளர்ச்சி
பக்கவாதத்தை தடுக்கும் சிறந்த ஹோம் ரெமிடி:
தேவையான பொருட்கள்:-
1)பாதாம் பருப்பு – 20
2)பசும் பால் – ஒரு கப்
செய்முறை விளக்கம்:-
முதலில் கால் கைப்பிடி பாதாம் பருப்பை ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊறவிடவும்.
பிறகு பாதாம் பருப்பின் தோலை நீக்கிவிட்டு வாணலியில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.
பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.அதன் பிறகு பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து ஒரு கப் பசும் பால் ஊற்றி சூடுபடுத்தவும்.
பால் ஒரு கொதி வந்ததும் அரைத்து வைத்துள்ள பாதாம் பருப்பு பொடியை கொட்டி மிதமான தீயில் காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.
இந்த பாலை ஒரு கிளாஸிற்கு ஊற்றி தேன் கலந்து பருகி வந்தால் பக்கவாத நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.
மேலும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இரத்த அழுத்த பரிசோதனை செய்யவும்.மது,புகை பழக்கத்தை விட்டுவிட்டு ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளவும்.