ஆண்டிபட்டி அருகே அபிஷேக் என்பவர் பத்தாம் வகுப்பு , ஆன்லைன் மூலம் பாடம் படித்து வந்த நிலையில், சரியாக படிக்கவில்லை என ஆசிரியர் திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர் கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டது.தொற்று காரணமாக நடப்பாண்டின் பள்ளிகள் திறப்பு தேதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.இதன் காரணமாக நடப்பாண்டின் பாடங்களை ஆன்லைன் மூலமாக ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மர பட்டியை சேர்ந்த அபிஷேக் என்ற பத்தாம் வகுப்பு மாணவன் ஆன்லைன் மூலமாக பாடம் படித்துவந்த வந்துள்ளார். இந்நிலையில் பாடம் சரியாக படிக்கவில்லை என ஆசிரியர் திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளாகி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தகவலரிந்து விரைந்து வந்த காவல்துறையினர், மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .