Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆசிரியர் இரும்பு ஸ்கேலால் மாணவனை தாக்கியதால் மாணவன் மரணம் !!

சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் மல்லேஸ்வரி நகரில் வேலு என்பவர், மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இவரது மகன் கார்த்திக் என்பவர் ,மேடவாக்கத்தில் கடந்த கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இவரது மகன் கார்த்திக், கடந்த பிப்ரவரி மாதம் வகுப்பறையில் தனது நண்பர்களுடன் தகாத முறையில் விளையாடிக்கொண்டு இருந்ததாக ஆசிரியர்கள் இரும்பு ஸ்கேலால் கண்மூடித்தனமாக அடித்துள்ளனர்.

இதனால் சில மாணவர்களுக்கு கை மற்றும் கால் பகுதியில் பலமான காயம் ஏற்பட்டு இருந்தது.ஆசிரியர் அடித்ததில் கார்த்திக்கிற்கு தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்து உள்ளனர். ஆனால் அவர் அலட்சியமாக பதில் அளித்து பெற்றோர்கள் திருப்பி அனுப்பிவிட்டார்.

இதனையடுத்து மாணவர் கார்த்திக் , ஆசிரியர் தலையில் அடித்து பெரும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் கார்த்திக்கை சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அந்த மாணவனை பரிசோதித்த மருத்துவர் ,பின் தலையில் பலமாக காயம் ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் கண்பார்வை செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து மாணவன் கார்த்திக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் மாணவனின் இடது கண் பார்வை முற்றிலும் பறிபோனது.மேலும், அந்த மாணவனுக்கு இரண்டாவது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால், கொரோணா பரவல் காரணமாக சிகிச்சை செய்ய முடியாமல் கார்த்திக்கின் பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கார்த்திக் திடீரென தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.இதனால் கார்த்திக்கின் பெற்றோர் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கார்த்திக் பலியானதால் மக்கள் திரண்டு கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அரசு பள்ளி ஆசிரியர் இரும்பு ஸ்கேலால் தாக்கியதால் தான் மாணவன் இருந்ததாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Exit mobile version