Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை! இன்று நுழைவுத் தேர்வு!

#image_title

அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை! இன்று நுழைவுத் தேர்வு!

தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினர் சேகர் ஆர் சுதன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பினார் அதில் அவர் கூறியதாவது அரசு மாதிரி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் சேர்ப்பதற்கு அடிப்படை மதிப்பீடு தேர்வு நடத்தப்படுகின்றது.

அந்த தேர்வானது நடப்பாண்டு இன்று காலை 10:30 முதல் 12 மணி வரை நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்விற்கு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் மொத்தம் 240 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தேர்வினை மாணவர்கள் எழுதுவதற்கான தேர்வுக்கான இடம் மற்றும் இதர ஏற்பாடுகளை முதன்மை கல்வி அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு எழுத தகுதி பெற்ற மாணவர்களின் பட்டியலை சேகரித்து அனுப்பி வைத்தனர்.அதனை அடுத்து மாணவர்களை தேர்வுக்கு அழைத்து வந்து மீண்டும் கூட்டிச் செல்ல பொறுப்பு ஆசிரியரும் நியமனம் செய்யப்பட்டது. இந்தத் தேர்வானது ஓஎம்ஆர் விடைத்தாளில் மாணவர்கள் எழுதினார்கள்.

இந்நிலையில் மாதிரி பள்ளி மாணவர் சேர்க்கைக்கு தகுதி தேர்வு நடத்தும் முறைக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது அவர்கள் கூறுகையில் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மாதிரி பள்ளியின் வளர்ச்சிக்காக பிற அரசு பள்ளிகளில் உள்ள திறமையான மாணவர்களை தேடி கண்டறிந்து சேர்ப்பது சரியல்ல இந்த முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும் நவீன வகுப்பறைகள் ஆய்வகங்கள் உலக தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் 45 மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version