அரியலூர் மாணவி விடுதியில் தற்கொலை விவகாரம்! மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அளித்த விளக்கம்!

0
128

அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழதெருவைச் சார்ந்த லாவண்யா என்ற பள்ளி மாணவி மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். அவர் அருகில் இருக்கின்ற ஜெயிண்ட் மைக்கேல் மகளிர் தங்கும் விடுதியில் தங்கிப் படித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், கடந்த 9ம் தேதி அன்று அவர் திடீரென்று வாந்தி எடுத்து இருக்கின்றார். அந்த சமயத்தில் அவருக்கு வயிற்று வலியும் ஏற்பட்டது என்று தெரிவித்ததால், அருகில் இருக்கின்ற மருத்துவமனையில் சிகிச்சை வழங்கியிருக்கிறார்கள். அதன் பிறகு மறுநாள் அவருடைய தந்தைக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து லாவண்யாவின் தந்த முருகானந்தம் மைக்கேல்பட்டி பகுதிக்கு வந்து தன்னுடைய மகன் லாவண்யாவை அழைத்துச் சென்று இருக்கிறார். அதன்பிறகு மாணவி லாவண்யாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் கடந்த 15ஆம் தேதி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கே அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் இடம் மாணவி லாவண்யா பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாகவும், விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் தூய்மைப்படுத்த வேண்டும் என்று விடுதியின் காப்பாளர் தெரிவித்ததன் பெயரில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, பூச்சி மருந்தை குடித்து விட்டதாகவும், கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், இதனையடுத்து காவல்துறையினர் மாணவி லாவண்யாவிடம் விசாரணை செய்தார்கள். அதோடு மாணவி தன்னை கிறிஸ்துவ மதத்திற்கு மாற வேண்டும் என்று தொடர்ந்து விடுதியின் காப்பாளர் வற்புறுத்தியதாகவும், இருந்தாலும் தான் மறுத்ததன் காரணமாக, தொடர்ந்து தன்னை கடுமையாக வசைபாடி வந்ததாகவும், தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பான புகாரின் அடிப்படையில் விடுதியின் காப்பாளர் சகாயமேரியை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவி லாவண்யா பரிதாபமாக உயிரிழந்தார். இவ்வாறான சூழ்நிலையில் மதமாற்றம் செய்ய மாணவியை கட்டாயப்படுத்தவில்லை என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் .