“அண்ணா பல்கலைக்கழக கல்லூரி வளாகத்தில், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருந்தார்”. அதைத் தொடர்ந்து, ‘பிரியாணி கடை உரிமையாளர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்’. அவர் மீது, ‘ஏற்கனவே 20 திருட்டு வழக்குகள் உள்ளன’. அப்பெண் புகார் அளித்த ‘எஃப்.ஐ.ஆரில் போனில் யாரிடமோ சார் என்று பேசிக்கொண்டு இருந்தார்’ என குறிப்பிட்டு இருந்தார்.
அதனை அறிந்த ‘எதிர்க்கட்சியான அதிமுகவினர், “யார் அந்த சார்” என்ற கோசத்தோடு போராட்டம் நடத்தினர்’. இது குறித்து, எதிர்க்கட்சி செயலாளர் ‘எடப்பாடி பழனிச்சாமி’ செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்திருந்தார். ஞானசேகரன் மீது ஜாமினில் வெளிவராதபடி, எட்டு வழக்குகளின் கீழ் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
‘இதனைத் தொடர்ந்து, இன்று(ஜன 2) விமான நிலையத்தில் செய்தியாளர்களை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்தார்’. இந்த வழக்கில், “நியாயமான விசாரணை வேண்டும். வழக்கில் ஞானசேகர் தவிர வேறு சிலரும் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது என்றார். மேலும், ‘எதிர்க்கட்சியின் நியாயமான போராட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்’.
அதே நேரத்தில், எதிர் கட்சியும் ‘இச்சம்பவத்தை அரசியல் ஆக்க கூடாது’. ‘குற்றவாளி யாராக இருப்பினும் கைது செய்ய வேண்டும்’ என அவர் தெரிவித்துள்ளார். ‘சிறையில் இருக்கும் போது ஞானசேகரை விசாரித்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து அவருக்கு தண்டனை வழங்க வேண்டும்’. மேலும், “விடுதியில் உள்ள மாணவிகளின் பாதுகாப்பில் மேற்கொண்டு கவனம் வேண்டும்” எனக் கூறியுள்ளார்”.