மாணவர்களே.. நாளை வெளியாகிறது 10 ஆம் வகுப்பு பப்ளிக் எக்ஸாம் ரிசல்ட்!! தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது?
தமிழகத்தில் ஆண்டு தோறும் மார்ச்-ஏப்ரல் மாதத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 08 அன்று நிறைவுற்றது.
இதையடுத்து ஏப்ரல் 10 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது.விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல்கள் தயாரிக்கும் பணிகள் முடிந்து நாளை அதாவது மே 10 அன்று திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் இயங்கி வரும் அரசு,அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 9,10,000 மாணவ மாணவிகள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியிருக்கின்றனர்.இதில் 4,57,525 மாணவர்கள்,4,52,498 மாணவிகள்,மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் மற்றும் தனித் தேர்வர்கள் 28,827 பேர் ஆவர்.
10 ஆம் வகுப்பு ரிசல்ட் எப்படி பார்ப்பது?
நாளை வெளியாக உள்ள தேர்வு முடிவுகளை www.results.nic.in, www.dge.tn.gov.in என்ற அரசுத் தேர்வு இயக்ககத்தின் இணையதளங்கள் மூலம் மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை அறிந்து கொள்ள முடியும்.
மேலும் மாணவ,மாணவிகள் பள்ளிகளில் வழங்கி இருக்கும் மொபைல் எண்களுக்கு SMS வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட இருக்கிறது.இதை தவிர்த்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,பொது நூலகங்கள் மூலமாகவும் பொதுத்தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள முடியும்.