தமிழகத்தில் 4 அரசு பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த தடை!!

0
114

தமிழகத்தில் 4 அரசு பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தற்காலிகமாக தடை விதிப்பதாக தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் பல்கலைக்கழக இணைப்பு அனுமதி பெறாத மற்றும் அனுமதி ரத்து செய்யப்பட்ட 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 4 அரசு பி.எட். கல்லூரிகளில் 2020-21 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த தற்காலிக தடை விதிப்பதாக தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவித்துள்ளது.

மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்ட 4 அரசு பி.எட். கல்லூரிகள்:

  • சென்னை மெரினாவில் உள்ள லேடி வில்லிங்டன் கல்லூரி போலி ஆவணங்களை சமர்ப்பிக்காததால் அங்கு பி.எட். மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • புதுக்கோட்டை அரசு பி.எட். கல்லூரியில் 16 ஆசிரியருக்கு பதில் 12 ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • குமாரபாளையம் அரசு பி.எட். கல்லூரியில் 16 ஆசிரியருக்கு பதில் 9 ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • திருமயம் அரசு பி.எட். கல்லூரியின் முதல்வர் உட்பட சில ஆசிரியர்கள் என்.சி.டி.இ விதிப்படி நியமிக்காததால் மாணவர் சேர்க்கை நடத்த அங்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விதிகளை பின்பற்றாததால் 4 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், குறைபாடுகளை சரிசெய்து 3 மாதத்தில் ஆவணத்தை சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.