Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாணவ மாணவிகள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு!!

Students are invited to apply for educational assistance!!

Students are invited to apply for educational assistance!!

மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவ மாணவிகள் இந்த ஆண்டிற்கான ( 2024 – 25 ) கல்வி உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம் என்று கடலூர் கலெக்டர் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பு தெரிவித்திருப்பதாவது :-

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தை சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் இன மாணவ, மாணவியர்களுக்கு 2024–2025ம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் அதில், இதனை பெறுவதற்கான குடும்ப வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm//scholarship schemes என்ற இணையதளங்கள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அல்லது, கலெக்டர் அலுவலகத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் இதை விண்ணப்பங்களை சரிபார்த்து அதனுடன் சேர்க்கப்பட வேண்டிய நகல்களையும் சேர்த்து கட்டாயமாக கொடுக்கப்பட வேண்டிய கல்வி நிறுவனத்தில் தவறாமல் கொடுக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version