Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாணவர்களே உசாராக இருங்க!! இனி நோ லீவ்!! பள்ளிக்கல்வித்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!

Students be careful!! No more leave!! Action taken by School Education Department!!

Students be careful!! No more leave!! Action taken by School Education Department!!

TN Government schools: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை மாணவர் வருகை பதிவேட்டில் உள்ள மாணவர் எண்ணிக்கை 100% சரியாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்கள் எப்போதும் (Education Management Information System) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் மூலம் ஆன்லைனில் பள்ளிக்கல்வித்துறை பராமரித்து வருகிறது. இதில் மாணவர்களின் அடிப்படை விவரங்கள், கல்வி உதவித்தொகை, பருவ மதிப்பெண்கள், அரசின் நலத்திட்டங்கள் போன்ற பல்வேறு தகவல்களை பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வருகை பதிவேடு மற்றும் EMIS என்ற இணையதளம் ஆகியவற்றில் கண்டிப்பாக மாணவர்களின் வருகை பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். மேலும் மாணவர் எண்ணிக்கை 100% சரியாக இருப்பதை மண்டல அளவில் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது.

இது மட்டும் அல்லாமல் மாணவர்கள் யாராவது நீண்ட கால விடுப்பில் இருந்து வேறு பள்ளிக்கு சேர்ந்து இருந்தால், தலைமை ஆசிரியர் அவரை EMIS தளத்தில் பொது பகுதிக்கு அனுப்ப வேண்டும். மேலும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை வருகை பதிவேட்டுக்கும், EMIS தளத்தில் உள்ள பதிவுக்கும் வித்தியாசம் இருப்பின் உடனே அவற்றை சரி செய்ய வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் தமிழக அரசின் நல திட்டங்களை வழங்குவதில் ஏற்படும் சிக்கல்களை களைவதற்காக  மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளது.

Exit mobile version