Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாணவர்களே உஷார்! பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றினால் இதுதான் தண்டனை!

Students beware! If you go around the town without going to school, this is the punishment!

Students beware! If you go around the town without going to school, this is the punishment!

மாணவர்களே உஷார்! பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றினால் இதுதான் தண்டனை!

திருத்தணி காந்தி சாலையில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுவருகின்றது. அந்த பள்ளிக்கு திருத்தணியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 1000மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களில் சிலர் பள்ளிக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து நல்ல டிப்டாபாக கிளம்பி வருகின்றனர்.ஆனால்  அவர்கள் பள்ளிக்கு செல்லாமல் ரயில் நிலையம் ,பேருந்து நிலையம் ,பூங்கா ஆகிய இடங்களில் ஜாலியாக சுற்றி திரிகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1மற்றும் பிளஸ் 2படிக்கும் மாணவர்கள் மூன்று பேர் திருத்தணி மலைக் கோவிலில் சுற்றி திரிந்தனர்.அப்போது அந்த கோவிலில் தீ தடுப்பு ஒத்திகை நடத்த தீயணைப்பு துறையினர் மாணவர்களை அழைத்து விசாரித்தனர்.அப்போது அவர்கள் வகுப்புக்கு செல்லாமல் சுற்றி திரிந்தது தெரியவந்தது.

அதையடுத்து மாணவர்களுக்கு  மூன்று போரையும் 15முறை தோப்புகரணம் போடும்படி தண்டனை வழங்கப்பட்டது.மேலும் ஒருவர் காதை மற்றொருவர் பிடித்தபடி தோப்புகரணம் போடப்பட்டது.அவர்கள் தோப்புகரணம் போடும் பொழுது இனி நாங்கள் ஒழுங்காக பள்ளிக்கு செல்வோம் என உறுதி மொழியும் எடுத்தார்கள்.அதனையடுத்து அந்த மூன்று பேரையும் தீயணைப்பு துறையினர் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர் .மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த நூதன தண்டனையை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Exit mobile version