மாணவர்களின் சான்றிதழ் திருத்தம்!! இன்றே கடைசி நாள்!!

0
147
#image_title

மாணவர்களின் சான்றிதழ் திருத்தம்!! இன்றே கடைசி நாள்!!

தமிழகத்தில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடந்து முடிந்தது. அதன்படி மே 8ம் தேதி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.

தேர்வெழுதிய 8,03,385 மாணவர்களில் 7,55,451 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் பெண்கள் தேர்ச்சி விகிதம் 98.38% என்றும், சிறுவர்கள் 91.45% என்றும் பதிவாகி உள்ளது. மொத்த தேர்ச்சி சதவீதம் 94.03 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 326 பள்ளிகள் 100% சதவீதம்  தேர்ச்சியை வழங்கி உள்ளது.

இதேபோல் 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 அன்று வெளியிடப்பட்டது. தேர்ச்சி விகிதம் 91.39% ஆகும். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக தேர்ச்சி விகிதம் வந்துள்ளது. இதில் மாணவிகள் 94.66% ஆகவும், சிறுவர்கள் 88.16% ஆகவும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதன்படி, 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்வதற்கு இன்று மாலை வரையில் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அது இன்றுடன் முடிவடைகிறது என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

மாணவர்களின் பெயர், புகைப்படம், பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தம் செய்ய கோரும் மாணவர்கள் இன்று வரை விண்ணப்பிக்கலாம்.

இன்றைக்குள் அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் திருத்தம் செய்ய கொடுக்கா விட்டால், திருத்தம் எதுவும் செய்யப் படாமல் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடப்படும் என்று தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.