பள்ளி மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர்? அமைச்சர் தொகுதியில் நடந்த அவலம்!!

0
168

பள்ளி மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர்? அமைச்சர் தொகுதியில் நடந்த அவலம்!!

திண்டுக்கல் மாவட்டம் நாகல் நகர் சந்தை ரோடு அருகே மாநகராட்சிக்கு சொந்தமான அரசுப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். படிக்க செல்லும் இடத்தில் மாணவிகள் துடைப்பத்துடன் பாத்ரூம் கழுவும் அவலம் அரங்கேறியுள்ளது.

இப்பள்ளியின் மாணவிகள் சீருடை அணிந்து கழிவறைகளை சுத்தம் செய்யும் காட்சிகள் புகைப்படங்களாக இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே அரங்கேறியுள்ள நிலையில், தமிழக மாணவர்களை கழிவறை கழுவுதல் மற்றும் ஆசிரியர்களின் தனிப்பட்ட வேலைகளுக்கு மாணவர்களை ஈடுபடுத்த கூடாது என்று சிலமுறை எச்சரித்துள்ளது. இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் முற்றிலும் தடுக்க எந்த நடிவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

இந்த சம்பவம் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களின் சொந்த மாவட்டத்தில் நடந்ததாகும். சில தினங்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு பகுதியில் கோயில் யானைகளுக்கு புத்துணர்வு முகாமை தொடங்கி வைக்கும் நிகழ்விற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்றபோது, ஒரு பழங்குடி சிறுவனை அழைத்து காலில் இருந்த செருப்பை கழட்டிய சர்ச்சையான விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அந்த நிகழ்வுக்காக அமைச்சர் வருத்தமும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திண்டுக்கல் பள்ளி மாணவர்களை ஆசரியர் ஒருவர் சுத்தம் செய்ய சொன்னதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் கண்டித்து வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதே கல்விதான் என்பதை தெரிந்தும் இதுபோன்ற தேவையற்ற செயல்களில் மாணவர்களை ஈடுபடுத்துவது மிகத்தவறான விஷயம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.