மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! இன்று முதல் உடனடியாக விண்ணப்பியுங்கள்!!

0
276
#image_title

மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! இன்று முதல் தொடக்கம் உடனே விண்ணப்பியுங்கள்!!

பாலிடெக்னிக் கல்லூரிகளில் தொழிற்கல்வி பட்டய படிப்புக்கான சேர்க்கை  இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. தொழிற்கல்வி படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடங்குவதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தின் கீழ் 58 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இவற்றால் மட்டும் தொழில்நுட்ப பட்டய (Diploma)  படிப்புகளுக்கு மொத்தம் 20,440 இடங்கள் உள்ளன. இதேபோல பகுதி நேர படிப்புகளில் சேருவோர் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளனர்.கடந்த ஆண்டு பகுதிநேர படிப்புகளுக்கு 1,025 இடங்கள் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

அதேபோல கடந்த கல்வியாண்டில் பாலிடெக்னிக்  மாணவர்கள்  சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி தொடங்கி ஜூலை 16-ம் தேதி நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் நேற்று முன்தினம் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டது.

சிபிஎஸ்இ மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்படும் என கல்வித்துறை கூறியுள்ளது.தற்போதுவரை சேர்க்கை இடங்களைவிட குறைவான மாணவர்களே விண்ணப்பித்து உள்ளனர். இதையும் கருத்தில் கொண்டு பாலிடெக்னிக் படிப்புக்களுக்கான 2-ம் சுற்று விண்ணப்ப பதிவை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் நேற்று தொடங்கப்பட்டது.

இந்த 2-ம் சுற்று விண்ணப்பப்பதிவை மாணவர்கள் சுயமாக மேற்கொள்ள இயலாது என்றும் தாங்கள் பயிலும் கல்லூரியின் மூலமே விண்ணப்பிக்க இயலும். இவ்வாறு கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.