மாணவர்களே உடனடியாக சென்று விண்ணப்பியுங்கள்!! இன்று முதல் துவக்கம்!!

0
169
Students go and apply immediately!! Starting today!!

மாணவர்களே உடனடியாக சென்று விண்ணப்பியுங்கள்!! இன்று முதல் துவக்கம்!!

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெற்று முடிவடைந்த நிலையில், கடந்த மே 8 ஆம் தேதி அன்று முடிவுகள் வெளியானது.  இதில் பெண்கள் 96.38% ஆகவும், சிறுவர்கள் 91.45%  ஆகவும் உள்ளது.

எனவே மொத்த தேர்ச்சி விகிதம் 94.03%  ஆக பதிவாகி உள்ளது. மேலும் திருநங்கை ஒருவர் தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழகத்தில் 326 பள்ளிகள் 100 % தேர்ச்சியை பெற்றுள்ளனர்.

இதன் வகையில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பம் உள்ள படிப்புகளை தேர்ந்தெடுத்து படித்தும், சில படிப்புகளுக்கு விண்ணப்பித்தும் வருகின்றனர். இந்நிலையில் தற்போது மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக்கல்வி இயக்குநரகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2023 – 2024 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு தமிழகத்தில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,526 இடங்கள் இருக்கின்றன. இதற்கு 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணிதம் போன்ற பாடப்பிரிவுகளில் படித்தவராக இருக்க வேண்டும்.

எனவே இளம் அறிவியல் செவிலியர் படிப்பிற்கு, பிஓடி, பிபிடி, பிபார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க ஒரே தடவையில் தேர்ச்சி பெற்றவராகவும், நாற்பது சதவிகிதம் பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிப்பில் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க tnhealth.tn.gov.in, tnmedicalsection.org என்ற இணைத்தள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.