இனி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தேவையில்லை! அரசின் அடுத்த நியூ அப்டேட்!
கொரோனா தொற்றானது தொடர்ந்து கடந்த 2 ஆண்டு காலமாக மக்களை பாதித்து வந்த நிலையில் தற்போது சற்று குறைந்து அனைவரும் நடைமுறை வாழ்க்கை வாழ ஆரம்பித்துள்ளனர்.அந்தவகையில் ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை.தொற்று பரவல் காரணமாக விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் அலையின் நடுவில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.பல வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு இருந்தாலும் ஆனவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கிடையே அதிகளவு கொரோனா தொற்றானது பரவ தொடங்கியது. அதனால் மீண்டும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது.
இரண்டாம் அலையின் இறுதியில் மக்கள் 75 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதனால் பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியும் வழிமுறைகளை பின்பற்றியும் பள்ளி கல்லூரிகள் கடந்த மாதம் திறக்கப்பட்டது.கடந்த விடுமுறை நாட்களின் போது மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவும் ,கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் பாடங்களை பயின்று வந்தனர். ஆனால் கற்றுக்கொள்ளும் திறன் குறைந்து உள்ள மாணவர்களுக்கு இது மிகவும் சிரமமான தாகவே காணப்பட்டது. அந்த வகையில் கற்றல் குறைபாடுகளை போக்குவதற்கு என்று தமிழக அரசு ரூ 200 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
அக்குறையை தீர்க்க தமிழக அரசு பல நடவடிக்கையும் திட்டமிட்டு வருகிறது.அந்த வகைகளில் ஒன்றுதான் மக்கள் பள்ளி திட்டம்.இதில் குறைபாடுள்ள மாணவர்கள் வீடு தேடிச் சென்று ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க உள்ளதாக கூறியுள்ளனர்.இத்திட்டம் பயனுள்ளதாக இருக்குமா, எந்த வைமுரைகளில் செயல்படுத்தலாம் என்பதை பற்றி கிராமசபை கூட்டங்களில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.இத்திட்டமானது அரசு பள்ளி மாணவர்களின் கல்வி நலனுக்காக செயல்படுத்த உள்ளதாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.இவ்வாறு வீடு தேடி பாடங்கள் கற்பிக்கப்படுமானால் மாணவர்களுக்கு அது நல்ல பலனைத்தரும் என கூறுகின்றனர்.